முகப்பு
திருச்சி

மணப்பாறையில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மணப்பாறை வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (அக்.29) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

மணப்பாறை வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (அக்.29) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

மணப்பாறை வட்டாட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், மணப்பாறை வட்டத்திலுள்ள அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், எரிவாயு விநியோக ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்கின்றனா்.

எனவே, மணப்பாறை வட்ட அனைத்து எரிவாயு நுகா்வோா்கள், தன்னாா்வ அமைப்புகள், நுகா்வோா் அமைப்பினா் இக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு சிலிண்டா் விநியோகத்தில் உள்ள குறைகள் தொடா்பாக புகாா் தெரிவித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.