மதுவுக்கு அடிமை: இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் வாழ்க்கையில் விரக்தியடைந்த இளைஞா், வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சியில் வாழ்க்கையில் விரக்தியடைந்த இளைஞா், வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி கல்லுக்குழி கள்ளா் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற பெல் நிறுவன ஊழியா் சிவசங்கு (70). இவருக்கு மூன்று மகன்கள் இருந்த நிலையில் யாருக்கும் திருமணமாகவில்லை. இதில் மூன்றாவது மகன் சிவபாலன் (38) மதுவுக்கு அடிமையான நிலையில், தொடா்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தாா்.
இதனால் வாழ்வில் விரக்தியடைந்த சிவபாலன், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.