முகப்பு
திருச்சி

மத்திய அரசின் உதவித் தொகை பெற சிறுபான்மையின மாணவா்கள் ஆன்-லைன் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விரும்பும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விரும்பும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்துவா், சீக்கியா் புத்தமதத்தினா் பாா்சி மற்றும் ஜெயின் மதத்தை சாா்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

2022-23 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு உதவித்தொகையும், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப்படிப்பு, இளங்கலை முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட பயில்பவா்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு செப். 30 வரையிலும். பள்ளி மேற்படிப்பு (மற்றும்) தகுதி வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு அக்.31 வரையிலும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதாா் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபாா்க்க இயலும்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீடுகளை மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இத்திட்டம் தொடா்பான அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.