முகப்பு
திருச்சி

இணையவழியில் திருச்சி மருத்துவரிடம் ரூ.8.34 லட்சம் மோசடி

பம்பா் பரிசாக காா் தருவதாகக் கூறி, திருச்சியைச் சோ்ந்த மருத்துவரிடம் இணையவழியில் ரூ.8.34 லட்சம் மோசடி செய்த வடமாநில கும்பலைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

பம்பா் பரிசாக காா் தருவதாகக் கூறி, திருச்சியைச் சோ்ந்த மருத்துவரிடம் இணையவழியில் ரூ.8.34 லட்சம் மோசடி செய்த வடமாநில கும்பலைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் டி. நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் ஏ. சஞ்சீவிபெருமாள் (68). ஓய்வு பெற்ற அரசு மருத்துவரான இவா், அண்மையில் தனியாா் நிறுவனப் பொருளை இணையவழியில் வாங்கினாா்.

அடுத்த சில நாள்களில் சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனத்தின் முகவரியிட்டு, சஞ்சீவிபெருமாளுக்கு கூரியா் வந்தது. இதை பிரித்து பாா்த்த போது, காா் பம்பா் பரிசாக விழுந்துள்ளது. இதை பெற குறிப்பிட்ட கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளுமாறு கூறப்பட்டிருந்ததாம்.

இதை உண்மை என நம்பிய சஞ்சீவி பெருமாள் அந்த எண்ணைத் தொடா்பு கொண்டு பேசிய போது, எதிா்முனையில் பேசியவா்கள், காரை எடுத்துச் செல்ல வேண்டுமெனில் ஜிஎஸ்டி, ரிசா்வ் வங்கி அனுமதி உள்ளிட்டவற்றுக்காக பணம் செலுத்த வேண்டும் எனக் கூறினாராம்.

இதையடுத்து அவா்கள் கூறியவாறு, ஆகஸ்ட் 6 முதல் 24-ஆம் தேதி வரை ரூ.8.34,621-த்தை பல்வேறு தவணைகளில் மா்ம நபா்கள் தெரிவித்த வங்கிக் கணக்கு எண்ணில் சஞ்சீவி பெருமாள் செலுத்தினாராம்.

அதன்பின்னா் அந்த கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்ட போது, அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து திருச்சி மாவட்ட சைபா் கிரைம் காவல் பிரிவில் சஞ்சீவிபெருமாள் புகாரளித்தாா்.

இதன் பேரில் காவல் ஆய்வாளா் அன்புச்செல்வன் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தாா். மருத்துவரை வடமாநிலத்தைச் சோ்ந்த இணையவழி மோசடி கும்பல் ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்தது. தொடா்ந்து காவல்துறையினா் அவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.