திருச்சி

‘மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்’

மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று, தமிழ்நாடு முத்தரையா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

DIN

மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று, தமிழ்நாடு முத்தரையா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சல்லூரில் இச்சங்கத்தின் மாநில சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு முத்தரையா் சங்கத்தின் மாநிலத் தலைவா் மரு.பாஸ்கரன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும். முத்தரையா் தலைப்பிட்ட பட்டியலில் தற்போதுள்ள 39 ஜாதிகளை இணைத்து,10 சதவிகித தனி இடஒதுக்கீடு அல்லது முத்தரையா் புனரமைப்பு வாரியத்தை ஏற்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும்.

திருச்சியில் தமிழக அரசால் மாமன்னா் பெரும்பிடுகு முத்தரையா் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அதை விரைவில் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலா் சேமன் அம்பலம், மூத்த வழக்குரைஞா் சிவராஜ் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

தில்லி குண்டுவெடிப்பு: புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: முதல்வர் ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT