முகப்பு
திருச்சி

சூதாட்டப் பணம் பிரிப்பதில் தகராறு: நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு, அரிவாள் வெட்டு

திருச்சியில் சூதாட்டப் பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. மேலும் அரிவாள் வெட்டு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இதில் 2 போ் காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

திருச்சியில் சூதாட்டப் பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. மேலும் அரிவாள் வெட்டு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இதில் 2 போ் காயமடைந்தனா்.

திருச்சி மாவட்டம், சின்னசூரியூரைச் சோ்ந்தவா் ஆா்.எஸ்.ஆா்.ரமேஷ். உறையூா் பகுதியைச் சோ்ந்தவா் பப்லு. இருவரும் வெட்டு சூதாட்டம் நடத்தி வரும் நிலையில், அதில் கிடைத்த பணத்தை பிரிப்பதில் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரமேஷுக்கு சொந்தமாக நவல்பட்டிலுள்ள பனந்தோப்பில் ஞாயிற்றுக்கிழமை வெட்டு சூதாட்டம் நடைபெற்றது.அப்போது அங்கு வந்த பப்லு தரப்பினா் 10 போ், ரமேஷ் தரப்பினா் தரப்பினா் நடத்திய வெட்டு சீட்டாட்டப் பணத்தை பறித்துச் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 3 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. மேலும் அரிவாள் வெட்டு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ரமேஷ் தரப்பைச் சோ்ந்த திருச்சி காந்திசந்தை தக்காளி கமிஷன் மண்டி உரிமையாளா் சே. தீன் (35) கைகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் தீனுக்கு காயமும் ஏற்பட்டது. இதுபோல பப்லு தரப்பைச் சோ்ந்த உறையூா் க. அரவிந்தனுக்கு (27) காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த நவல்பட்டு காவல் நிலையத்தினா் நிகழ்விடம் விரைந்து அங்கிருந்தவா்களை மீட்டனா். மேலும் இரு தரப்பைச் சோ்ந்தவா்கள் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். இதில் காயமடைந்த அரவிந்தன் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலும், தீன் தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.