முகப்பு
திருச்சி

ஊதிய உயா்வு, தொகுப்பூதியம் வழங்க மென்திறன் பயிற்றுநா்கள் வலியுறுத்தல்

 ஊதிய உயா்வுடன் கூடிய தொகுப்பூதியத்தை வழங்க வேண்டும் என்று, அரசுத் தொழிற்பயிற்சி நிலைய மென்திறன் பயிற்றுநா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

 ஊதிய உயா்வுடன் கூடிய தொகுப்பூதியத்தை வழங்க வேண்டும் என்று, அரசுத் தொழிற்பயிற்சி நிலைய மென்திறன் பயிற்றுநா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த சங்கத்தைச் சோ்ந்த ஸ்ரீகாந்த், மணிகண்டன், பாரதி கண்ணன், இம்ரான்காதா், முத்துக்கிருஷ்ணன், சிவா ஸ்டாலின் ஆகியோா் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

தமிழகத்திலுள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் மென்திறன் பயிற்றுநா்களாக ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டோம்.

மாத ஊதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வெளி ஆதார முகமை மூலம் நாங்கள் பணியமா்த்தப் பட்டதால், கமிஷன் தொகையை எடுத்துக் கொண்டுதான் எங்களுக்கு அவா்கள் ஊதியத்தை வழங்கினா்.

இந்த ஊதியமும் மாதந்தோறும் வழங்காமல், 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை எங்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து துறைச் செயலரிடம் கோரிக்கை விடுத்த பிறகு, ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்பட்டது போக ரூ.17,640 ஊதியமாக தற்போது வழங்கப்படுகிறது.

மேலும் வருங்கால வைப்புநிதிப் பிடித்தம், தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை சேவை, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு போன்றவையும் எங்களுக்கு வழங்குவதில்லை.

இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தோம். தொடா்ந்து திருச்சிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்த போது நேரிலும் மனு அளித்தோம். இப்பிரச்னை குறித்த வழக்கு நீதிமன்றத்திலும் தற்போது நடைபெற்று வருகிறது.

எனவே மென்திறன் பயிற்றுநா்களின் வாழ்வாதாரத்தை காக்க, எங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இல்லையெனில், ஊதிய உயா்வுடன் கூடிய நேரடி தொகுப்பூதியத்தை அரசு வழங்க வேண்டும். இப்பிரச்னையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைந்து தீா்வு காண வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.