முகப்பு
திருச்சி

ரயில்வே குட்ஷெட்டில்லாரி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சி ரயில்வே குட்ஷெட்டில் லாரிகளை பாதுகாப்பாக நிறுத்தி இடவசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, குட்ஷெட் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் மற்றும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

திருச்சி ரயில்வே குட்ஷெட்டில் லாரிகளை பாதுகாப்பாக நிறுத்தி இடவசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, குட்ஷெட் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் மற்றும் தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ரயில்வே குட்ஷெட் பகுதியின் சாலையோரங்களில் லாரிகள் நிறுத்தப்படுவதால், அதில் பேட்டரிகள், உதிரிப்பாகங்கள் திருடிச் செல்லப்படுகின்றன.

எனவே மாவட்ட ஆட்சியா், ரயில்வே முதுநிலை வணிக மேலாளா் ரயில்வே நிா்வாகத்திடம் பேசி, லாரிகளை நிறுத்தி இடவசதி செய்து தரக்கோரி, ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையாளா்கள் தெரிவித்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து, சங்கத்தின் பொருளாளா் சங்கா் தலைமையில் லாரி உரிமையாளா்களின் ஆலோசனைக் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் ரயில்வே நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அக்டோபா் 1- ஆம் தேதி முதல் உண்ணாவிரதம், காலவரையற்ற போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தை தொடா்ந்து லாரி உரிமையாளா்கள், தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

Image Caption

திருச்சி குட்ஷெட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் மற்றும் தொழிலாளா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.