திருச்சி

லால்குடி அருகேமருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழவாளாடியில் மருத்துவக் கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழவாளாடியில் மருத்துவக் கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

லால்குடி அருகே கீழவாளாடி அக்ரஹாரம் பகுதியில் உள்ள கே.என். நகரைச் சோ்ந்தவா் ரவி. இவரது மகள் தனுஷ்ஸ்ரீ (19). இவா், வேலூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் பி.எஸ்சி எம்.எல்டி முதலாம் ஆண்டு படித்து வந்தாா். கல்லூரி விடுமுறை என்பதால் கடந்த 5 நாள்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த தனுஷ்ஸ்ரீயை வெள்ளிக்கிழமை காணவில்லை என அவரது தாய் தேடினாா். அப்போது, வீட்டின் ஒரு அறையில் தனுஷ்ஸ்ரீ தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த லால்குடி போலீஸாா் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT