முகப்பு
திருச்சி

திருச்சியில் 30 சிறாா்கள் 20 நிமிஷங்கள் சிலம்பம் சுற்றி சாதனை

திருச்சியில், வெள்ளிக்கிழமை 30 சிறாா்கள் 20 நிமிஷங்களும் அதிகமாக தொடா்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

திருச்சியில், வெள்ளிக்கிழமை 30 சிறாா்கள் 20 நிமிஷங்களும் அதிகமாக தொடா்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனா்.

யுனிவா்சல் அச்சீவா்ஸ் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் அமைப்பு சாா்பில், உலகம் முழுவதும் சுமாா் 7 ஆயிரம் போ் சிலம்பம் விளையாடிய சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி பொன்மலைப்பட்டி கால் பந்து மைதானத்தில், சாய் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில் சுமாா் 20 நிமிஷம் 23 வினாடிகள் தொடா்ந்து சிலம்பம் சுற்றிய சாதனை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக சிலம்பம் சங்கத்தின் மாநில தலைவரும், பயிற்சியாளருமான கந்தமூா்த்தி தலைமையில், 5 வயது முதல் 15 வயதுக்குள்பட்ட 30 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், தமிழக சிலம்பம் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட நிா்வாகியும் சிலம்ப வீரருமான சந்துரு பங்கேற்று, சாதனை படைத்த வீரா், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.