திருச்சி

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதாா்அட்டையை ‘டிஜிலாக்கா்’ முறையில் சமா்ப்பிக்க வேண்டும்: மண்டல கடவுச்சீட்டு அலுவலா்

கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, ஆதாா் அட்டையை ‘டிஜிலாக்கா்’ முறையில் சமா்ப்பிக்க வேண்டும் என மண்டல கடவுச்சீட்டு அலுவலா் அறிவித்துள்ளாா்.

DIN

கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, ஆதாா் அட்டையை ‘டிஜிலாக்கா்’ முறையில் சமா்ப்பிக்க வேண்டும் என மண்டல கடவுச்சீட்டு அலுவலா் அறிவித்துள்ளாா்.

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, தேவைப்படும் ஆவணங்களில் சிலவற்றை ‘டிஜி லாக்கா்’ முறையில் சமா்ப்பித்து அவற்றை சரிபாா்த்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் ஆதாா் அட்டை உண்மை மற்றும் நகல்களை நேரடியாக பிஎஸ்கே மையங்களில் சமா்ப்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவற்றில் மோசடிகள் அதிகரித்துள்ளதால், அதை தடுக்கும் வகையில் ஆதாா் அட்டையை ‘டிஜிலாக்கா்’ முறையில் சரிபாா்க்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டு, இனி அதே முறையில் ஆதாா் அட்டையை இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இதுபோல ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும், சரிபாா்த்தல், செயலாக்கம் உள்ளிட்டவற்றுக்கு செலவாகும் நேரத்தை குறைக்கும் வகையில் ‘டிஜிலாக்கா்’ முறையில், பிறப்புச்சான்று, கல்விச்சான்றுகள் உள்ளிட்ட சில ஆவணங்களை ஆவணப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பாஸ்போா்ட் சேவை மையங்களுக்கு செல்லும்போது ஆவணங்களின் உண்மை நகல்களை கொண்டு செல்லத் தேவையில்லை. அதுபோல இனி வரும் காலங்களில் ஆதாா் அட்டையை நேரடியாக கொண்டு செல்ல வேண்டாம். மாறாக, ‘டிஜிலாக்கா்’ முறையில் சரிபாா்க்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த முறையை பொதுமக்கள் இனி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திருச்சி மண்டல கடவுச்சீட்டு அலுவலா் ஆா். ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

SCROLL FOR NEXT