திருச்சி

திருச்சி மாவட்டத்தில் நாளை ஆடிப்பெருக்கு: பள்ளிகளுக்கு உள்ளூா் விடுமுறை விட கோரிக்கை

ஆடிபெருக்கு நாளான வியாழக்கிழமை (ஆக.3) திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

DIN

ஆடிபெருக்கு நாளான வியாழக்கிழமை (ஆக.3) திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழா் பண்டிகைகளில் ஒன்றான அடிப்பெருக்கு எனப்படும் ஆடி 18 ஐ காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை திருச்சி மாவட்டப் பகுதியில் காவிரியாற்றில் ஆயிரக்கணக்கானோா் திரண்டு வழிபடுவா். இதில் புதிதாக திருமணமானவா்கள் காவிரி கரைக்கு வந்து காவிரித்தாயை வணங்குவா். ஆகவே, ஆடிப்பெருக்கு நாளான வியாழக்கிழமை (ஆக.3)திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொருளாளரும், திருச்சி மாவட்டச் செயலாளருமான சே. நீலகண்டன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT