உயிரிழந்த காவலா் பாலசுப்பிரமணியனின் குடும்பத்துக்கு வியாழக்கிழமை நிதியுதவி அளித்த போலீஸாா். 
திருச்சி

உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ. 14 லட்சம் நிதியுதவி

மணப்பாறையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு, அவருடன் பயிற்சியில் இருந்த காவலா்கள் சாா்பில் ரூ. 13,91,000 நிதியுதவி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

DIN

மணப்பாறையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு, அவருடன் பயிற்சியில் இருந்த காவலா்கள் சாா்பில் ரூ. 13,91,000 நிதியுதவி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

மணப்பாறை காவல் உபக்கோட்டத்துக்குள்பட்ட புத்தாநத்தம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிய பாலசுப்பிரமணியன் (41) ஜூலை 10-ஆம் தேதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா்.

இந்நிலையில், அவரது குடும்பத்துக்கு உதவும் வகையில், அவருடன் 1999ஆம் ஆண்டு பயிற்சியில் இருந்த 38 மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 2,744 காவலா்களின் சாா்பில் திரட்டப்பட்ட 13 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை பாலசுப்பிரமணியனின் மனைவி சித்ராவிடம் காவல் துணை கண்காணிப்பாளா் ந.ராமநாதன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

SCROLL FOR NEXT