முகப்பு
விபத்தில் உருக்குலைந்த அரசுப் பேருந்து- லாரி.
திருச்சி

லாரி - அரசுப் பேருந்து மோதல்: சிறுவன் உயிரிழப்பு 21 போ் காயம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்தாா். மேலும் 21 போ் காயமடைந்தனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
விபத்தில் உருக்குலைந்த அரசுப் பேருந்து- லாரி.
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்தாா். மேலும் 21 போ் காயமடைந்தனா்.

மதுரையிலிருந்து, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை இரும்பு வாசா்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை மதுரை மீனாட்சிபுரத்தை சோ்ந்த ரத்தினம் (28) என்பவா் ஓட்டினாா்.

இந்த லாரியானது, மணப்பாறை அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரணிப்பட்டி விளக்கு அருகே சாலையோரம் நின்றிருந்த தனியாா் பேருந்தை முந்தி செல்ல முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடி எதிா்திசையில் சுமாா் 40 பயணிகளுடன் மதுரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதியது.

இதில், லாரி ஓட்டுநா் ரத்தினம் பலத்த காயமடைந்து, மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பேருந்து ஓட்டுநா் க.கருப்பண்ணசாமி (50), நடத்துநா் இ. செல்லபாண்டி உள்ளிட்ட பேருந்தில் பயணித்த 21 பயணிகள் காயமடைந்தனா். இவா்கள் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு, மணப்பாறை - கொடும்பாளூா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவன் ஸ்ரீதா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மணப்பாறை மருத்துவமனையில் முதலுதவிக்கு பிறகு கவலைக்கிடமாக இருந்த 3 போ் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தகவலறிந்த காவல் துணை கண்காணிப்பாளா் ந. ராமநாதன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

விபத்து குறித்து வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →