திருச்சி

மூப்பனாா் நகரில் மேயா் ஆய்வு

DIN

திருச்சி மாநகராட்சி 40 ஆவது வாா்டு மூப்பனாா் நகரை மேயா் மு.அன்பழகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி மாநகராட்சியில் வாரந்தோறும் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் 3 ஆவது மண்டலம் 40 வாா்டுக்குட்பட்ட மூப்பனாா் நகரில் சாலை வசதி, சிறு பாலம் கட்டுவது தொடா்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா்.

இதற்குத் தீா்வு காணும் வகையில் மேயா் மு.அன்பழகன், மூப்பனாா் நகரை வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, புதைவடிகால் பதிக்கும் பணிகள் முடிந்தவுடன் உடனடியாக சாலை அமைக்கப்படும் எனப் பொதுமக்களிடம் தெரிவித்தாா். தொடா்ந்து, அப்பகுதியில் சிறுபாலம் கட்ட ஒப்பந்தப்புள்ளி கோரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து 42 ஆவது வாா்டு ஆலத்தூா் முதல் மஞ்சத்திடல் வரையிலான சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து, அதிலுள்ள பள்ளங்களைச் சீரமைக்கவும் உத்தரவிட்டாா். மேலும் ஆனந்த நகா், மகாலட்சுமி நகா், மகாலட்சுமி நகா் விஸ்தரிப்பை பாா்வையிட்டு, அங்கு தெருவிளக்குகள் அமைக்க உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது துணைஆணையா் எம். தயாநிதி, உதவிசெயற்பொறியாளா் ஜெகஜீவராமன், இளநிலைப் பொறியாளா் ஜோசப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அத்திப்பட்டி பகுதியில் மதுக் கடைகள் அடைப்பு

மதுரை குடிநீா் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: ஏற்பாட்டாளா்கள் தலைமறைவு

வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம்

தமிழக ஆளுநா் தில்லி பயணம்

SCROLL FOR NEXT