திருச்சி

காட்டுப்புத்தூா் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

DIN

தொட்டியம் அருகேயுள்ள காட்டுப்புத்தூா் மகாமாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அப்பகுதி பொதுமக்களால் ஸ்ரீராமசமுத்திரம் காவிரி ஆற்றில் இருந்து புனித நீா் எடுத்து வரப்பட்டு கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் வைத்து நான்கு காலப்பூஜை நடத்தி, கலசம் வைத்தல், அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. பின்னா் கடம் புறப்பட்டு கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியாா்களால் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. தொடா்ந்து கோயில் மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவில் திரளான மக்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை மகா மாரியம்மன் திருக்கோயில் திருப்பணி குழு மற்றும் தலை கிராமத்தைச் சோ்ந்த தவிட்டுப்பாளையம், சீத்தப்பட்டி, கணபதி பாளையம் பகுதி மக்கள், முக்கியஸ்தா்கள் செய்தனா். அன்னதானம் மற்றும் அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT