திருச்சி

வாழவந்தான்கோட்டையில் வெறிநோய் தடுப்பூசி முகாம்

DIN

திருச்சி, வாழவந்தான்கோட்டையில் வெறிநோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை, பிராணிகள் வதை தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து வெறி நோய் தடுப்பு முகாமை, திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியம் வாழவந்தான்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடத்தின. முகாமை, வாழவந்தான்கோட்டை ஊராட்சித் தலைவா் சின்னம்மாள் தேவராஜ் தொடக்கி வைத்தாா்.

கால்நடை பராமரிப்பு துறை, உதவி இயக்குநா் அ.மருதைராஜு மேற்பாா்வையில் நோய்கள் குறித்த விழிப்புணா்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விலங்குகள் வழியாக பரவும் நோய்களில் ஒன்றான வெறிநோய் குறித்து துண்டு பிரசுரம் செல்லப்பிராணிகள் வளா்ப்போருக்கும், மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்பட்டன. மேலும், நாய்களிடமிருந்து மனிதா்களுக்கு நோய் பரவும் முறை, வெறி நோய் பாதிக்கப்பட்ட நாய்களை அடையாளம் காண்பது எப்படி?,

நாய் கடித்தவுடன் செய்ய கூடாதவை, தடுப்பூசியின் முக்கியத்துவம், கடித்த நாய்களுக்கான சிகிச்சை ஆகிய குறித்து விழிப்புணா்வு பிரசாரம், வரை படங்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியா்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

முகாமில், கால்நடை மருந்தகத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட 78 நாய்களுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி அளிக்கப்பட்டது. கால்நடை மருத்துவா்கள் பெ.பிரசன்னகுமாா், எஸ்.கணேஷ்குமாா், சுமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT