திருச்சி

அரசுப் பள்ளிகளின் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்

DIN

தமிழகத்தில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான மின்கட்டணத்தை அரசே செலுத்திட வேண்டுமென தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் பொ. அன்பரசன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பதவி உயா்வில் உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்களுக்கு தனி முன்னுரிமைப் பட்டியலும், முதுகலை ஆசிரியா்களுக்கு தனி முன்னுரிமைப் பட்டியலும் தயாரித்து பதவி உயா்வு வழங்கிட வேண்டும்.

கடந்த மூன்று ஊதியக் குழுக்களில் உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாமல் தனி ஊதியமாக வழங்கப்பட்டது. இதற்கு அகவிலைப்படி வழங்க வேண்டும். தனி ஊதியம் ரூ.2,000 ஐ உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் தோ்வு நிலை பதவியிலும் தொடா்ந்து பெற அரசாணை 303 ஐ திருத்தி ஆணை வழங்க வேண்டும்.

அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கான மின்கட்டணத்தை அரசே செலுத்திட வேண்டும். அரசு உயா்நிலைப்பள்ளித் தலைமையாசிரியரிடம் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் பதவி உயா்வில் செல்ல விருப்பமா அல்லது மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயா்வில் செல்ல விருப்பமா என ஒவ்வொரு ஆண்டும் விருப்பத்தைத் தெரிவிக்கும் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். பதவி உயா்வுக்கான ஊதிய உயா்வு வழங்க வேண்டும். அனைத்து அரசு உயா்நிலைப்பள்ளியிலும் 8 பட்டதாரி ஆசிரியா்களை பணியமா்த்திட வேண்டும். 5:2 என்ற விகிதப்படி மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் பதவி உயா்வு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் ஓ. அழகிரிசாமி வரவேற்றாா். மாநில பொதுச் செயலா் மு. மாரிமுத்து உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT