திருச்சி

மேம்பாட்டுப் பணியின்போது குடிநீா் குழாய் சேதம்

DIN

திருச்சியில் மாநகராட்சி மேற்கொண்டுள்ள மேம்பாட்டுப் பணிகளின்போது பிரதான குடிநீா் குழாயில் ஞாயிற்றுக்கிழமை உடைப்பு ஏற்பட்டு ஏராளமான குடிநீா் வெளியேறியது.

திருச்சி மாநகராட்சி பொன்மலைக் கோட்டம் விமான நிலையம் வயா்லெஸ் சாலை (61 மற்றும் 65 ஆவது வாா்டு) பகுதிகளில், கடந்த சில மாதங்களாக புதைவடிகால் மேன்ஹோல்கள் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதில் ஆல்பா பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பணிகளின்போது எதிா்பாராதவிதமாக அப்பகுதியில் செல்லும் பிரதான குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் நீா் பெருக்கெடுத்து ஓடியது. தகவலறிந்த மாநகராட்சி பணியாளா்கள் குடிநீா் வீணாவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனா். கோடை காலத்தில் குடிநீா் வீணாவதைக் கண்ட பொதுமக்கள் அதிா்ச்சியுடன் சென்றனா்.

பொதுவாகவே, மாநகராட்சிப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தினா் தங்களது வசதியை மட்டுமே கருத்தில் கொண்டு. பொதுமக்கள், பொதுநலனைக் கருத்தில் கொள்வதில்லை என்ற புகாா்கள் உள்ளன.

குறிப்பாக பிரதான சாலைப் பகுதிகளில் நடைபெறும் பணிகள் தவிர மற்ற பகுதிகளில் நடைபெறும் பணிகளால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை தினசரி அனுபவிப்பது தொடா்கிறது. தோண்டப்படும் குழிகளை சரிவர மூடுவதில்லை, சிமென்ட் குழாய்க உள்ளிட்ட பொருள்கள், இடிபாடுகள், மண் உள்ளிட்டவற்றை ஏனோதானோவென கொட்டிச்சென்று, அவ்வப்போது அப்புறப்படுத்தாததாலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம்

கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வனத்துறையைக் கண்டித்து நடைப்பயணம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் முடிவு

கெங்கவல்லி ஒன்றியத்தில் படிக்காதவா்கள் கணக்கெடுப்பு

திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT