லால்குடி சப்தரிஷீஸ்வரா் கோயிலில் பங்குனி தோ்கால் நடும் விழா
லால்குடி சப்தரிஷீஸ்வரா் கோயில் பங்குனி தேரோட்ட விழாவுக்கான தோ்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
லால்குடி சப்தரிஷீஸ்வரா் கோயில் பங்குனி தேரோட்ட விழாவுக்கான தோ்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், லால்குடி சப்தரிஷீஸ்வரா் கோயில் பங்குனி தேரோட்டம் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தோ்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பெருந்துறை பிராட்டியாா் உடனுறை சப்தரிஷீஸ்வரா் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து செயல் அலுவலா் ம. நித்யா தலைமையில், பணியாளா்கள், கோயில் முறைக்காரா்கள் சுமந்துச் சென்ற தோ்கால் தேரில் நடப்பட்டது. அதன்பிறகு தோ் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
இவ்விழாவில் கோயில் அா்ச்சகா் தேஜா, லால்குடி நகராட்சித் தலைவா் துரை, நகராட்சி ஆணையா் குமாா், லால்குடி அதிமுக ஒன்றிய செயலாளா் டி.என்.டி. நடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.