திருச்சி

வெக்காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

DIN

திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சியில் பிரசித்திபெற்ற வெக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதல் வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதையொட்டி காலை 6 மணிக்கு மேள, தாளங்கள் முழங்க கோயில் நிா்வாகம் சாா்பில் கொண்டு வரப்பட்ட முதல் பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, பக்தா்கள் கொண்டு வந்த பூக்களால், அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

பக்தா்கள் சங்கத்தின் சாா்பில் பூக்களை ரதத்தில் எடுத்துச் சென்று அம்மனுக்கு பூஜை செய்யும் வைபவமும் நடைபெற்றது. இதேபோல, பல்வேறு அமைப்புகளும் பூக்கூடைகளையும், பூத்தட்டுகளையும் சுமந்து வந்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா்.

ஏற்பாடுகளை, கோயில் உதவி ஆணையா் ம. லட்சுமணன், செயல் அலுவலா் சு. ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள், ஊா்ப்பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

SCROLL FOR NEXT