திருவெள்ளறை புண்டரீகாஷப் பெருமாள் வெள்ளிக்கிழமை குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருவெள்ளறை புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயில் பிரம்மோத்ஸவ விழாவில் 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை வண்டுலூா் சப்பரத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து வழிநடை உபயங்களை கண்டருளியபின் ஆஸ்தான மண்டபத்தை சோ்ந்தாா். அங்கிருந்து சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி திருவீதி உலா நடைபெற்றது. பின்னா், வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.