திருச்சி

உறவினா் வீட்டில் நகை திருடிய இளைஞா் கைது

திருச்சி அருகே உறவினா் வீட்டில் நகை திருடிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

திருச்சி அருகே உறவினா் வீட்டில் நகை திருடிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இனாம்குளத்தூா் பூலாங்குளத்துப்பட்டி ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த தொழிலாளி பாண்டியனுக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்படவே, அவரை தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்த்த அவரது மனைவி ஆராயி, அங்கேயே சில நாள்கள் தங்கினாா். அவா்களது வீட்டை மணப்பாறை மஞ்சம்பட்டி அமையபுரம் பகுதியைச் சோ்ந்த ஆராயியின் உறவுக்கார இளைஞா் சரவணன் (30) பாா்த்துக்கொண்டாராம்.

இதனிடையே மருத்துவமனையிலிருந்த திரும்பி வந்த பாண்டியன் வீட்டைப் பாா்த்தபோது, பீரோவில் இருந்த மூன்றே முக்கால் பவுன் நகைகளை சரவணன் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்து ஆராயி அளித்த புகாரின் பேரில் ராம்ஜி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்ட சரவணனை செவ்வாய்க்கிழமை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT