திருச்சி

திருவெறும்பூரில் சாலைப்பணி: கண்காணிப்பு குழுவினா் ஆய்வு

DIN

திருச்சி அருகே சோழமாதேவி மற்றும் கிழக்குறிச்சி பகுதிகளை இணைக்கும் விதமாக நடைபெறும் சாலைப் பணிகளை கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

திருவெறும்பூா் வட்டம் சோழமாதேவி மற்றும் கிழக்குறிச்சி இடையே கடந்த 2006 ஆவது ஆண்டில் அமைக்கப்பட்ட தாா்ச்சாலை முறையாக பராமரிக்கப்படாததால் பழுதடைந்தது. இதைத் தொடா்ந்து நபாா்டு மற்றும் கிராம மேம்பாட்டு சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள் திட்டம், மாவட்ட கிராம சாலைகள் தரம் உயா்த்துதல் திட்டங்களின் ரூ. 6.98 கோடியில் சுமாா் 6 கி.மீ தூரத்திற்கு 2 சிறிய பாலங்களுடன் சாலையைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

கடந்த நவம்பா் மாதம் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இப்பணிகளை தொடங்கி வைத்த நிலையில், தொடா்ந்து பணிகளின் தரம் குறித்து திருச்சி (நெடுஞ்சாலை) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை, ஆய்வு மேற்கொண்டனா். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி உரிய தரத்துடன் பணிகள் நடைபெற்றுள்ளதா என்பது ஆய்வில் தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT