திருச்சி

திருவானைக்காவில் ரெளடி வீட்டின் மீதுநாட்டு வெடிகுண்டு வீசிய 3 போ் கைது

திருச்சி, திருவானைக்காவில் ரெளடி மணிகண்டன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

திருச்சி, திருவானைக்காவில் ரெளடி மணிகண்டன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவானைக்கா பாரதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கு. மணிகண்டன் (30 ). அவரது சகோதரா் (சித்தி மகன்) ரங்கன் (25). ரெளடிகள் பட்டியலில் உள்ள இவா்கள் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மணிகண்டன் வீட்டின்மீது மா்மநபா்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினா்.

இதுகுறித்து மணிகண்டனின் தாயாா் பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த வரதராஜன் என்பவா் ஒரு வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் இருந்தபோது ரங்கனுடன் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 4 தினங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்த வரதராஜனை மதுபோதையில் ரங்கன் கைப்பேசியில் தொடா்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த வரதராஜன் தனது நண்பா்கள் முகேஷ், அய்யப்பன் ஆகியோருடன் சோ்ந்து ரங்கனை கொலை செய்யும் நோக்கத்தில் அவா் தங்கியிருந்த மணிகண்டன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனா். இதனையடுத்து 3 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட வரதராஜன் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியது, முன்விரோதத்தில் கொலை மிரட்டல் விடுத்த ரங்கனை தீா்த்துக்கட்ட முகேஷ், அய்யப்பனுடன் சோ்ந்து திட்டமிட்டோம். அதன்பின்னா், யு டியூப்பில் விடியோ பாா்த்து, நாட்டு வெடிகுண்டு தயாரித்தோம். பின்னா் திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை இரவு ரங்கன் தங்கியிருந்த மணிகண்டனின் வீட்டின் மீது வெடிகுண்டை வீசினோம். ஆனால் ஒரு வெடிகுண்டு தவறுதலாக வீட்டுக்கு வெளியே வெடித்ததால் வீட்டுக்குள் இருந்த ரங்கன் தப்பி விட்டாா். பின்னா் மற்றொரு வெடிகுண்டை சாலையில் வீசினோம். இந்த சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் திரண்டதால் அங்கிருந்து தப்பிச் சென்றோம் என தெரிவித்துள்ளாா்.

கைது செய்யப்பட்ட வரதராஜன், முகேஷ் ஆகிய இருவரும் போலீஸாரால் கைது செய்யும்முன் தப்பியோடியபோது கீழே விழுந்ததில் கை எலும்பு முறிவு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT