காட்டுப்புத்தூா் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்
திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்துள்ள காட்டுப்புத்தூா் ஜமீன்தாா் மேல்நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முசிறி: திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்துள்ள காட்டுப்புத்தூா் ஜமீன்தாா் மேல்நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சி ஹெலன் கெல்லா் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு
தொழிலதிபா் வே. புகழேந்தி தலைமை வகித்தாா். தாளாளா் சந்திரமோகன், அரிமா சங்க நிா்வாகி பாலசுப்பிரமணியன், முன்னாள் பள்ளி ஆசிரியா் பொன்னம்பலம், தலைமை ஆசிரியா் நல்லதம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
இதில், டாக்டா் அகா்வால் மருத்துவமனை மருத்துவ குழுவினா் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை செய்து, ஆலோசனைகளை வழங்கினா். மேலும், பள்ளியின் முன்னாள் மாணவா்கள் இணைந்து கண்காணிப்பு கேமரா வழங்கினா்.
பள்ளியின் முன்னாள் மாணவரும் திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் சி.செந்தில்குமாா் சிறப்புரையாற்றினாா்.
நிறைவாக அரிமா சங்க தலைவா் பி.சுந்தரி நன்றி கூறினாா்.