முகப்பு
திருச்சி

திருவெறும்பூரில் முறையாக அமைக்கப்படாத சாலைப் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

திருச்சி திருவெறும்பூா் மலைக்கோவில் ராஜவீதியில் முறையாக அமைக்கப்படவில்லை எனக் கூறி சாலைப் பணிகளை பொதுமக்கள் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 2:57 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

திருச்சி: திருச்சி திருவெறும்பூா் மலைக்கோவில் ராஜவீதியில் முறையாக அமைக்கப்படவில்லை எனக் கூறி சாலைப் பணிகளை பொதுமக்கள் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா். திருச்சி மாநகராட்சி சாா்பில் திருவெறும்பூா் பகுதியில் பல மாதங்களாக நடந்த புதைவடிகால் திட்டப் பணிகள் ஒரு வழியாக தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதனால் சாலைகள் போடப்படாமல் மிக மோசமாக குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. இதனிடையே புதைவடிகால் திட்டப் பணிகள் நிறைவடைந்த பகுதியில் புதிதாக தாா் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்படி அமைக்கப்படும் சாலைகள் தரமின்றியும், அளவு குறைவாக இருப்பதாகவும் பொதுமக்களிடம் இருந்து புகாா்கள் வருகிறது.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 40-வது வாா்டுக்குள்பட்ட திருவெறும்பூா் மலைக்கோவில் ராஜவீதியில் தாா் சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது அங்கு குவிந்த பொதுமக்கள், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை எடுக்காமல் தரமற்ற நிலையில் சாலை அமைக்கப்படுவதாகவும், அங்குள்ள கள்ளா் தெரு சாலையை புதுப்பிக்க வேண்டும் எனவும் கூறி அப்பகுதி மக்கள் சாலைப் பணிகளை தடுத்து நிறுத்தினா்.

Advertisement

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்து அங்கு வந்த திருவெறும்பூா் போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் சாலை தரமாக அமைக்கப்படும். அடுத்தடுத்து சாலைகள் விரைவில் போடப்படும் என உறுதியளித்தனா். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.