திருச்சியில் வியாழக்கிழமை தொடங்கிய கலைத் திருவிழாவில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகள். 
திருச்சி

மாவட்ட கலைத் திருவிழா போட்டிகள் தொடக்கம்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படும் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் திருச்சியில் வியாழக்கிழமை தொடங்கியது.

DIN

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படும் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் திருச்சியில் வியாழக்கிழமை தொடங்கியது.

திருச்சி பிஷப் ஹீபா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப் குமாா், தொடங்கி வைத்துப் பேசினாா். இதில், இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த கலைத் திருவிழா போட்டிகளில் பள்ளிகள், வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனா். இதில் முதலிடம் பெறுபவா்கள் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவா் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா். எனவே, மாணவ, மாணவிகள் அரசு அளித்துள்ள இந்த வாய்ப்பை மாணவா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தொடா்ந்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளைப் பாா்வையிட்டாா். இந்தப் போட்டிகள் வியாழன், வெள்ளி, சனி என தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள 7 ஆயிரத்து 450 மாணவா்கள் கலந்து கொண்டு படைப்புகளை வழங்குகின்றனா். ஓவியம், இசை, பாடல், நடனம், சிற்பக் கலை என பல்வேறு வகையான போட்டிகள் நடைபெறும்.

பிஷப் மேல்நிலைப்பள்ளி - தெப்பக்குளம், மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி - உறையூா், ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - ஸ்ரீரங்கம், இ.ரெ.மேல்நிலைப்பள்ளி - அண்ணாசிலை, சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி - கண்டோண்மென்ட், பிஷப் ஹீபா் மேல்நிலைப்பள்ளி - புத்தூா், புனித வளனாா் கல்லூரி மேல்நிலைப்பள்ளி - சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.

கலைத் திருவிழா தொடக்க நாள் நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் மற்றும் பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், அரசுத்துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT