திருச்சி

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய கூட்டமைப்பினா் பொதுக்கூட்டம்

DIN

திருச்சி, அக். 28: பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து திருச்சியில் இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில், பாலக்கரை ரவுண்டானா அருகில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளா் ஜாகீா் உசேன் தலைமை வகித்தாா். அகில இந்திய முஸ்லிம் லீக் மாநில தலைவா் காஜாமைதீன் தொடங்கி வைத்துப் பேசினாா். எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் அப்துல் ஹமீது, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவா் கே.எம். சரீப், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில தலைவா் ஹைதா்அலி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா். இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஹபீபுா் ரஹ்மான், துணை ஒருங்கிணைப்பாளா்கள் அப்துல்லா ஹஸ்ஸான் பைஜி, உதுமான்அலி, தமஜக மாவட்ட செயலாளா் சித்திக், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் அழைப்பாளா் ரஃபியுல்லா, சாலிடாரிட்டி இளைஞா் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினா் பீா் முஹம்மது ஆகியோா் பேசினா்.

இஸ்ரேலுக்கு இந்தியா அளித்துள்ள ஆதரவை திரும்பப் பெற வேண்டும். இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகுவை உடனடியாக போா் குற்றவாளியாக ஐநா சபை அறிவிக்க வேண்டும். ஐ.நா. சபையில் உள்ள நாடுகளை இந்திய அரசு ஒன்றிணைத்து பாலஸ்தீனத்தில் அமைதி ஏற்படுத்திட முயற்சி செய்ய வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிா்வாகிகள் முகமது வரவேற்றாா். அபுபக்கா் சித்திக் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT