முகப்பு
திருச்சி

திருச்சி: காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் போராட்டம்!

தமிழகத்துக்கான காவிரி தண்ணீரைப் பெற்றுத் தர வலியுறுத்தி காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் சார்பில், திருச்சியில் இன்று தொடர் முழக்க தர்னா போராட்டம் நடைபெற்று வருகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:16 PM
காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் போராட்டம்
பகிர்:

திருச்சி: தமிழகத்துக்கான காவிரி தண்ணீரைப் பெற்றுத் தர வலியுறுத்தி காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் சார்பில், திருச்சியில் இன்று தொடர் முழக்க தர்னா போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமை வகித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் காவிரிப் பாசன விவசாயிகளுக்கு குறுவை சாகுபடியை பாதுகாப்பதற்கும், சம்பா சாகுபடி தொடங்குவதற்கும் சட்ட ரீதியான தண்ணீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தமிழகத்துக்கான காவிரி நீர் உரிமையை வலியுறுத்தி பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இந்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சி பிஎஸ்என்எல் தலைமைத் தொடர்பு அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெறுகிறது.

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன்,  மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் செழியன்,  விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல செயலாளர் தமிழாதன், சமூக நீதிப் பேரவை மாவட்ட தலைவர் ரவிக்குமார், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் கூட்டு இயக்க நிர்வாகிகள் என பலர் பங்கேற்றுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →