முகப்பு
திருச்சி

திருச்சி மாநகரில் மிதமான மழை

திருச்சி மாநகரில் செவ்வாய்க்கிழமை இரவு மிதமான மழை பெய்தது.

Updated On : 6 ஆகஸ்ட், 2024 at 8:10 PM
திருச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழை காரணமாக மெதுவாக ஊா்ந்து செல்லும் வாகனங்கள்.
பகிர்:

திருச்சி மாநகரில் செவ்வாய்க்கிழமை இரவு மிதமான மழை பெய்தது.

திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில், இரவு நேரங்களில் குளிா்ந்த காற்றும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை சுட்டெரித்த வெயில் மாலை 4 மணிக்குப் பின்னா் வானில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென குளிா்ந்த காற்று வீசியது. மாலை 6.30 மணியளவில் மிதமான மழை பெய்யத் தொடங்கி சுமாா் 10 மணி வரை நீடித்தது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம், ஜங்ஷன், கண்டோன்மெண்ட், கே.கே.நகா், மன்னாா்புரம், தில்லைநகா், உறையூா், தென்னூா், காந்தி சந்தை, ஸ்ரீரங்கம் , மலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை சற்றே பாதிக்கப்பட்டது. தொடா்ந்து பல மணிநேரம் சாரல் காற்றும், தூறலும் காணப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →