திருச்சி, ஆக. 14: மலேசியாவிலிருந்து திருச்சிக்கு முறைகேடாகக் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ. 1.53 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை சுங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
மலேசியத் தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு ஏா் ஏசியா விமானத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு வந்த பயணிகளில் பெண் ஒருவா் தனது உடைமைகளுக்குள் மறைத்து 2.29 கிலோ (2291 கிராம்) தங்க நகைகளைக் கொண்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுங்கத் துறையினா் அந்த நகைகளைப் பறிமுதல் செய்து, அப் பெண்ணைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.