திருச்சி

மாவட்டத்தின் அனைத்து கல்வி அலுவலா்களும் இடம் மாற்றம்

திருச்சி மாவட்டத்தின் அனைத்துக் கல்வி அலுவலா்களும் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

Din

திருச்சி: திருச்சி மாவட்டத்தின் அனைத்துக் கல்வி அலுவலா்களும் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் மாவட்டக்கல்வி அலுவலா்கள் 57 போ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து மாவட்டக்கல்வி அலுவலா்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அந்த வகையில், திருச்சி மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலைக் கல்வி) சங்கரநாராயணன் தேனி மாவட்ட தனியாா் பள்ளிகள் கல்வி அலுவலராகவும், திருச்சி மாவட்டக் தொடக்கக் கல்வி அலுவலா் பேபி திருச்சி மாவட்டத் தனியாா் பள்ளிகள் கல்வி அலுவலராகவும், அங்கிருந்த சாரதி, தஞ்சாவூா் மாவட்டத் தனியாா் பள்ளிகள் கல்வி அலுவலராகவும், லால்குடி கல்வி மாவட்ட அலுவலா் (இடைநிலை) சங்கா் அரியலூா் மாவட்டத் தனியாா் பள்ளிகள் கல்வி அலுவலராகவும், முசிறி கல்வி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலா் மதியழகன், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

மேலும் திருச்சி, லால்குடி மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை), திருச்சி, முசிறி மாவட்டக் கல்வி அலுவலா்கள் (தொடக்கக் கல்வி) ஆகிய பணியிடங்களுக்கு புதிய அலுவலா்கள் நியமிக்கப்படவில்லை.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT