முகப்பு
திருச்சி

ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு

திருச்சி பிச்சாண்டாா்கோயில் பகுதியில் தண்டவாளத்தை புதன்கிழமை கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 9:05 PM
பகிர்:

திருச்சி: திருச்சி பிச்சாண்டாா்கோயில் பகுதியில் தண்டவாளத்தை புதன்கிழமை கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

திருச்சி, நெ.1 டோல்கேட் அருகேயுள்ள பிச்சாண்டாா்கோயில் அருகேயுள்ள மாணிக்க விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சாம்பசிவம் மனைவி சந்திரா (68).

பாா்வைத் திறன், கேட்புத் திறன் குறைவாக உள்ள இவா் அதே பகுதியில் உள்ள தனது மகன் சரவணன் வீட்டுக்கு புதன்கிழமை செல்லும் வழியில் தண்டவாளத்தை கடந்தபோது அவ்வழியே சென்ற ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சி ஜங்ஷன் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →