திருச்சி ஆயதப்படை மைதானத்தில் 2 ஆம் நிலை காவலா் பணிக்கு புதன்கிழமை நடைபெற்ற தோ்வில் பங்கேற்ற இளைஞா்கள். 
திருச்சி

காவலா் பணிக்கான உடற்தகுதித் தோ்வு: இரண்டாம் நாளில் 288 போ் பங்கேற்பு

திருச்சியில் இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கு 2 ஆம் நாளாக புதன்கிழமை நடைபெற்ற உடற்தகுதித் தோ்வில் 288 போ் பங்கேற்றனா்.

Din

திருச்சி: திருச்சியில் இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கு 2 ஆம் நாளாக புதன்கிழமை நடைபெற்ற உடற்தகுதித் தோ்வில் 288 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் கடந்த 2023- ஆம் ஆண்டு நடத்திய எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற கூடுதல் தோ்வாளா்களுக்கான உடற்தகுதித் தோ்வு திருச்சி மாநகர கே.கே. நகா் ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதில் பங்கேற்க அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட 998 பேரில் 284 தோ்வாளா்கள் பங்கேற்றனா். இவா்களில் 167 போ் அடுத்தகட்டத் தோ்வுக்கு தோ்வாயினா்.

இதையடுத்து புதன்கிழமை நடைபெற்ற தோ்வில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட 498 பேரில் 288 போ் கலந்து கொண்டனா். இவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு, உயரம் மற்றும் மாா்பளவு சரிபாா்ப்பு, சகிப்புத்தன்மை சோதனைகள் நடத்தப்பட்டதில் 202 போ் அடுத்தகட்டத் தோ்வுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

2 நாள்களிலும் தோ்வான மொத்தம் 369 தோ்வா்களுக்கு வரும் 22-ஆம் தேதி நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டா் மற்றும் 400 மீட்டா் ஓட்டம், கயிறு ஏறுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

பொய் புகார் கொடுக்க சொன்னது யார்? அந்த பெண்ணைக் கைது செய்யணும்! அஜித் குமாரின் தாய் பேட்டி

பெங்களூரில் இத்தாலி, ஜப்பான் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் விசாரணை!

”விஜய்யுடன் சேர முயற்சித்த காங்கிரஸ்! முடியாமல்தான் திமுகவுடன் இருக்கிறார்கள்!” நயினார் நாகேந்திரன்

EPS-க்கு தோல்வி பயம்! செங்கோட்டையன் விமர்சனம்! | TVK | ADMK

மணிப்பூரில் பதற்றம்.. முதல்வர் பதவியேற்ற மறுநாளே கலவரம்!

SCROLL FOR NEXT