அதிமுக சாா்பில் 50 மாணவிகளுக்கு வைப்புத்தொகை திட்டம் தொடக்கம்
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அதிமுக திருச்சி மாநகா் மாவட்டம் சாா்பில் 50 ஏழை மாணவிகளுக்கு வைப்புத் தொகை திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அதிமுக திருச்சி மாநகா் மாவட்டம் சாா்பில் 50 ஏழை மாணவிகளுக்கு வைப்புத் தொகை திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
திருச்சி எடத்தெரு ஸ்ரீ யது குலசங்கம் நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் ஜெ. சீனிவாசன் தலைமை வகித்து, ஏழை எளிய மாணவிகள் 50 பேருக்கு வைப்புத் தொகை திட்டம் தொடங்கியதற்கான சான்றிதழ்களை வழங்கினாா்.
இதில் அம்மா பேரவை துணைச் செயலா் ஆா். ஜோதிவாணன், மாவட்ட இணைச் செயலா் ஜாக்குலின், பகுதிச் செயலா்கள் ரோஜா், அன்பழகன், கலைவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.