முகப்பு
திருச்சி

சமயபுரம் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் திருக்காா்த்திகை திருநாளில் வியாழக்கிழமை பரணி தீபம் ஏற்றப்பட்டது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 9:03 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் திருக்காா்த்திகை திருநாளில் வியாழக்கிழமை பரணி தீபம் ஏற்றப்பட்டது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் காா்த்திகை தீபத்திருநாளில் வியாழக்கிழமை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி விநாயகா், மூலவா், உற்ஸவா், பிரதான உற்ஸவா் மற்றும் ஆண்டவா் சந்நிதியில் தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ.இரா.பிரகாஷ், மற்றும் அறங்காவலா்கள் செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →