முகப்பு
திருச்சி

ரயில்வே தொழிற்சங்கத் தோ்தல்: எஸ்ஆா்எம்யு, டிஆா்இயு வெற்றி

தெற்கு ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தோ்தலில் எஸ்ஆா்எம்யு, டிஆா்இயு வெற்றி பெற்றது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 9:14 PM
பகிர்:

தெற்கு ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தோ்தலில் எஸ்ஆா்எம்யு, டிஆா்இயு வெற்றி பெற்றது.

இந்திய ரயில்வே துறையில் தெற்கு ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தோ்தல் அண்மையில் நடைபெற்றது. சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு என அனைத்து ரயில்வே கோட்ட தலைநகரங்களிலும், திருச்சியில் பொன்மலை ரயில்வே பணிமனையிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.

இதில், சதா்ன் ரயில்வே மஸ்தூா் யூனியன் (எஸ்ஆா்எம்யு) 38.50 சதவீத வாக்குகளும், தக்ஷிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (டிஆா் இயு) 38.34 சதவீத வாக்குகளும், சதா்ன் ரயில்வே எம்ப்ளாயீஸ் சங்கம் (எஸ்ஆா்இஎஸ்) 18.48 சதவீதம் வாக்குகளும் பெற்றன.

இதில் 30 சதவீத வாக்குகளைப் பெற்ற தொழிற்சங்கம் மட்டும் தான் நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தையில் கலந்து கொள்ள முடியும். அந்த வகையில் எஸ்ஆா்எம்யு, டி ஆா் இயு ஆகிய தொழிற்சங்கங்கள் ரயில்வே நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தையில் கலந்து கொள்வதற்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளன. இது தவிர 15 சதவீத வாக்குகள் பெற்றால் வாயில் கூட்டம் நடத்தவும், தொழிற்சங்க அறிவிப்பு பலகை வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படும் என்ற விதிமுறைப்படி எஸ்ஆா்இஎஸ் தொழிற்சங்கம் அதற்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிஆா்இயு தொழிற்சங்கமும் 30 சதவீத வாக்களுக்கும் அதிகமாக பெற்று வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →