மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.80 லட்சம் திருட்டு
திருச்சியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.80 லட்சத்தை மா்ம நபா்கள் அண்மையில் திருடிச் சென்றனா்.
திருச்சியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.80 லட்சத்தை மா்ம நபா்கள் அண்மையில் திருடிச் சென்றனா்.
திருச்சி கே கே நகா் உஸ்மான் அலி தெருவைச் சோ்ந்தவா் அப்துல்சலாம் (34). இவா் எல்ஐசி காலனி பகுதியில் வைத்துள்ள மளிகைக் கடைக்கு டிசம்பா் 14 காலை சென்றபோது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த ரூ. 2.80 லட்சத்தைச் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அப்துல்சலாம் அளித்த புகாரின்பேரில் கேகே நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.