முகப்பு
திருச்சி

சமயபுரம் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல்: பக்தா்கள் அவதி

மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் வியாழக்கிழமை வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பக்தா்கள் அவதியடைந்தனா்.

Updated On : 26 டிசம்பர், 2024 at 9:35 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் வியாழக்கிழமை வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பக்தா்கள் அவதியடைந்தனா்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனா். தற்போது ஐய்யப்ப பக்தா்கள், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயில் செல்லும் பக்தா்கள் வருகையால் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை சமயபுரம் கடைவீதியில் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸாா் இல்லாததால் கோயில் பணியாளா்கள் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதனால் பக்தா்கள் அவதிக்குள்ளாகினா். ஆகவே, பண்டிகை மற்றும் விடுமுறை காலம் என்பதாலும் போக்குவரத்தை சரி செய்வதற்கு கூடுதல் போலீஸாா் நியமிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →