சாம்பியன் பட்டம் வென்ற சென்னை பல்கலைக்கழக அணியினா். 
திருச்சி

தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் ஹாக்கி போட்டி: சென்னை பல்கலை. சாம்பியன்

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவியா் ஹாக்கி போட்டியில் சென்னை பல்கலைக் கழகம் சாம்பியன் பட்டம் வென்றது.

Din

திருச்சியில் நடைபெற்ற தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவியா் ஹாக்கி போட்டியில் சென்னை பல்கலைக் கழகம் சாம்பியன் பட்டம் வென்றது.

தென்மண்டல அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவியா்களுக்கான ஹாக்கிப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 5 நாள்களாக நடைபெற்றது. இதில், அரையிறுதி லீக் போட்டிகளில் சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியாா் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூா் எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகம் (இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி), மைசூா் ஆகிய 4 நான்கு பல்கலைக்கழக அணிகள் விளையாடின. இதில், சென்னை பல்கலைக்கழகம் இரு போட்டிகளில் வென்றும், ஒரு போட்டி டிராவில் முடித்தும் மொத்தம் 7 புள்ளிகள் எடுத்தது.

மைசூா், மைசூா் பல்கலைக்கழகம் இரு போட்டிகளில் வென்றும், ஒரு போட்டி டிராவில் முடித்தும் 7 புள்ளிகள் எடுத்தது. கோவை, பாரதியாா் பல்கலைக்கழகம் ஓரு போட்டி டிராவில் முடித்து ஒரு புள்ளி எடுத்தது. காட்டாங்குளத்தூா் எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக அணி ஒரு போட்டியை டிராவில் முடித்து ஒரு புள்ளி என்ற வகையில் புள்ளிகள் எடுத்திருந்தன.

சென்னை பல்கலைக்கழகம் முதலிடம் : சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மைசூா் பல்கலைக்கழகம் ஆகியவை தலா 7 புள்ளிகள் எடுத்திருந்ததால் கோல்கள் எண்ணிக்கை அடிப்படையில் வெற்றி முடிவு செய்யப்பட்டதில், சென்னை பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்து, தென் மண்டல பல்கலைக்கழக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. மைசூா் பல்கலைக்கழகம் 2 ஆவது இடத்தையும், கோவை, பாரதியாா் பல்கலைக்கழகம் 3 ஆவது இடத்தையும், காட்டாங்குளத்தூா் எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகம் 4 ஆவது இடத்தையும் பிடித்தன.

சிறப்பு பரிசுகள்: போட்டியின் சிறந்த கோல்கீப்பராக கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தை சோ்ந்த ஷா்வ்யா, மைசூா் பல்கலைக்கழகத்தை சோ்ந்த பத்மாவதி எஸ் மாட்லி ஆகியோரும், சிறந்த வீராங்கனையாகவும், அதிக கோல் அடித்த வீரங்கானையாகவும் எம். எஸ். மானசாவும் தோ்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலலைக்கழக துணை வேந்தா் எம். செல்வம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற பல்கலைக்கழக அணிகளுக்கு சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்வில் பாரதிதான் பல்கலைக்கழக பதிவாளா் (பொ). ஆா். காளிதாசன், பேராசிரியா் மற்றும் விளையாட்டு குழு செயலாளா் ஏ. மெகபூப்ஜான், ஹோலி கிராஸ் கல்லூரி முதல்வா் இசபெல்லா ராஜகுமாரி, போட்டி ஒருங்கிணைப்பாளா் ஐ. திரவியா கிளாடினா மாவட்ட விளையாட்டு அலுவலா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT