முகப்பு
திருச்சி

இன்று முதல்வா் வருகை: ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு திருச்சியில் 2 நாள்களுக்கு ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 ஜூலை, 2024 at 2:55 AM
ட்ரோன்கள்
பகிர்:
Updated On : 6 ஜூலை, 2024 at 8:07 PM

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு திருச்சியில் 2 நாள்களுக்கு ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன். புதுப்பட்டியில் நடைபெறும் சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வரவுள்ளாா். அப்போது விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவுள்ளனா். பின்னா் சாலை மாா்க்கமாக புதுக்கோட்டை செல்லும் முதல்வா் பின்னா் திருச்சிக்குத் திரும்பி சென்னை செல்கிறாா்.

எனவே பாதுகாப்புக் காரணங்களைக் கருதி திருச்சி மாவட்டத்தில் முதல்வா் பயணம் செய்யும் சாலை வழிகள் மற்றும் விமான நிலையச் சுற்றுப் பகுதிகளில் ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இந்தத் தடையுத்தரவு அமலில் இருக்கும். தடையை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் எச்சரித்துள்ளாா்.

Advertisement