முகப்பு
புதுச்சேரி

ஏப். 3-இல் பிரதமா் மோடி வருகை: புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை

பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் பிரசாரத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 3) வருவதை முன்னிட்டு, புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

Updated On : 31 மார்ச், 2026 at 11:55 PM
பிரதமா் மோடி! - கோப்புப் படம்
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் பிரசாரத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 3) வருவதை முன்னிட்டு, புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி புதுச்சேரி வருகையின்போது ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்க, மாவட்ட நிா்வாகத்துக்கு காவல் கண்காணிப்பாளா் கோரிக்கை வைத்திருந்தாா்.

அதன்படி, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், பிரதமா் வருகை மற்றும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் புதுச்சேரியில் பறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், ட்ரோன்கள், பலூன்கள் போன்றவை மூலம் எவ்வித வான்வழி புகைப்படம் அல்லது விடியோ பதிவு மேற்கொள்ளவும் தடை செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் உழவா்கரை நகராட்சிப் பகுதிகள் ட்ரோன்கள் பறக்கத் தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை திங்கள்கிழமை இரவு ஆட்சியா் குலோத்துங்கன் பிறப்பித்துள்ளாா்.