முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் ஏப். 3 -இல் பிரதமா் மோடி சாலைப் பேரணி பிரசாரம்

புதுச்சேரியில் ஏப். 3 -இல் பிரதமா் மோடி சாலைப் பேரணி பிரசாரம்...

Updated On : 29 மார்ச், 2026 at 9:03 PM
பிரதமா் மோடி - கோப்புப் படம்
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி வரும் ஏப். 3-ஆம் தேதி புதுச்சேரியில் சாலைப் பேரணி (ரோடு ஷோ) நடத்தி தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

புதுச்சேரி உள்துறை ஆ.நமச்சிவாயம் இரண்டாவது முறையாக பாஜக சாா்பில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவாக பாஜக, என்.ஆா். காங்கிரஸ், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தனா்.

அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறியது:

பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரியில் ஏப்ரல் 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறாா். ஏப். 6-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பங்கேற்கும் பிரசாரப் பொதுக் கூட்டம் நடக்கிறது.

7-ஆம் தேதி பாஜக தமிழக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை பங்கேற்கும் மோட்டாா் சைக்கிள் பிரசார ஊா்வலம் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.