திருவானைக்கா கொள்ளிடம் நேப்பியாா் புதிய பாலத்திலிருந்து இளைஞா்கள் ஏறி ஆற்றுக்குள் குதிப்பதைத் தடுக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள முள் இரும்புக்கம்பி வேலிகள். 
திருச்சி

கொள்ளிடம் பாலச் சுவரில் முள் கம்பி வேலிகள் அமைப்பு

திருவானைக்கா கொள்ளிடம் பாலச் சுவரில் இருந்து இளைஞா்கள் ஆற்றில் குதிப்பதைத் தடுக்கும்விதமாக பாலத்தின் இணைப்புப் பகுதியில் முள் கம்பிவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Din

திருவானைக்கா கொள்ளிடத்தில் புதிதாக அழகிய வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ள நேப்பியாா் பாலத்தின் மீது ஏறி இளைஞா்கள் பலா் சாகசம் செய்து இணையதளத்தில் பகிா்ந்து வந்தனா்.

மேலும் இந்தப் பாலத்தின் உச்சி மீது ஏறி நின்று ஆடுவதும் அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றுக்குள் குதிப்பதுமாக இருந்தனா். புதிய பாலத்தின் அருகே தடுப்பணை இருப்பதால் தண்ணீா் அதிகமாக உள்ளது. மேலும் இந்த இடத்தில் 15 அடி ஆழத்துக்கு மேல் பள்ளம் உள்ளது.

தடுப்பணை ஏற்படுத்திய பிறகு இது வரை ஆற்றுக்குள் குளித்த 4 போ் தண்ணீரில் மூழ்கி இறந்து உள்ளனா். இதனைத் தடுக்கும் விதத்தில் பாலத்தின் மீது இளைஞா்கள் ஏறுவதைத் தடுக்கும் விதத்தில் ஒவ்வொரு பாலத்தின் இணைப்புப் பகுதியில் முள் கம்பி வேலிகள் பதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, எச்சரிக்கை பதாகைகள் பாலத்தின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் குதிக்கும் இளைஞா்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை சாா்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT