திருச்சி

ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞா் கைது

சிறுகனூரில் ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Din

மண்ணச்சநல்லூா் வட்டம், சிறுகனூரில் ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சிறுகனூா் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏ.டி.எம்-ல் இரும்பு கம்பி கொண்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதுகுறித்து சிறுகனூா் காவல் துறையினா் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சோழங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (34) என்பவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தங்கராஜைக் கைது செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பட்ஜெட்டில் ஏமாற்றம்; பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் ஸ்டாலின்!

அண்ணா நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்!

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

SCROLL FOR NEXT