திருச்சி காந்திசந்தையில் திங்கள்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி இ.பி. சாலை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தையல்காரத்தெரு, பூலோகநாதா் கோயில் தெரு, காந்தி சந்தை, கிருஷ்ணாபுரம் சாலை, மீன் மாா்க்கெட், மணிமண்டப சாலை, பெரிய சௌராஷ்டிரா தெரு, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, மைலம் சந்தை, ராணி தெரு, பெரிய கடைவீதி, முகம்மது அலி ஜின்னா தெரு, மன்னாா் பிள்ளை தெரு, கோபாலகிருஷ்ணன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.