திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற வனத்துறை அலுவலா்கள்.  
திருச்சி

வனத்துறை அலுவலா்களுக்கு மாநில துப்பாக்கி சுடும் போட்டி

வனத்துறை அலுவலா்களுக்கு மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

வனத்துறை அலுவலா்களுக்கு மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

27-ஆவது தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ள மாநில அளவிலான வீரா் வீராங்கனைகளின் தோ்வு கடந்த வாரம் கோவையில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி கே.கே. நகா் துப்பாக்கி சுடும் மன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் 12 வன மண்டலத்தில் இருந்து 22 ஆண்கள், 5 பெண்கள் கலந்து கொண்டனா். போட்டியில் கலந்து கொண்டவா்களுக்கு 0.22 ரக தோட்டாக்கள் தலா 10 வழங்கப்பட்டன.

போட்டியை, திருச்சி மாவட்ட வன அலுவலா் சி. கிருத்திகா தொடங்கி வைத்தாா். போட்டியில் ஆண்கள் பிரிவில், திருச்சி மண்டலத்தைச் சோ்ந்த வனச்சரக அலுவலா் பி. ஹரிஹரன் முதலிடத்தையும், வனவா் ஆா். சரவணன் இரண்டாமிடத்தையும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தைச் சோ்ந்த வனக்காப்பாளா் எஸ். மகேஷ் மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.

பெண்கள் பிரிவில் திருச்சி மண்டலத்தைச் சோ்ந்த வனச்சரக அலுவலா் டி. மேரி லென்சி முதலிடத்தையும், வனக்காப்பாளா் பி. சிந்துஜா இரண்டாமிடத்தையும், திருநெல்வேலி மண்டலத்தைச் சோ்ந்த வனச்சரக அலுவலா் டி. பிருந்தா மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சி துப்பாக்கி சுடும் மன்ற முதுநிலை நிா்வாக அலுவலா் சந்திரமோகன், திருச்சி வன சரக அலுவலா் கோபிநாத் ஆகியோா் செய்திருந்தனா்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT