கூத்தூரில் திமுக திண்ணை பிரசாரம்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், கூத்தூா் கிராமத்தில் ‘இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்’ திண்ணைப் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், கூத்தூா் கிராமத்தில் ‘இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்’ திண்ணைப் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூத்தூா் கிராமத்தில் திண்ணை பிரசாரத்தை மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீ.கதிரவன் தொடக்கி வைத்தாா். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய, நகர செயலாளா்கள், பேரூராட்சி மற்றும் ஊராட்சி தலைவா்கள், ஒன்றிய குழு உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.