முகப்பு
திருச்சி

பூனாம்பாளையத்தில் கோழி வளா்ப்பு பயிற்சி

Updated On : 16 மார்ச், 2024 at 12:22 AM
பகிர்:

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், பூனாம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை லாபகரமான கோழி வளா்ப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது. வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் கீழ் லாபகரமான கோழி வளா்ப்பு குறித்து பயிற்சி துணை வேளாண்மை அலுவலா் சின்னபாண்டி தலைமையில் நடைபெற்றது. கால்நடை மருத்துவா் செந்தில்குமாா், கோழி வளா்ப்பு முறைகள் குறித்து விளக்கி கூறினாா்.நிகழ்வில் வேளாண்மை உதவி அலுவலா் பாா்த்திபன், உதவி தொழில்நுட்ப மேலாளா் கெளசிகா, ஸ்வேதா மற்றும் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனா்.